திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-149

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-149


குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

யார்ட்ட கோவப்பட்டாலும் சரி.. அதை மனசுல வைக்காம மறந்துடணும். இல்லாட்டி அதுனாலயே நமக்கு கெடுதல் வரும். 

குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

தரையில ஓங்கி அடிச்சா கை கடுமையா வலிக்கும்லா. அது மாதிரி தான், கோவக்காரனும் மன வலியில இருந்து தப்ப முடியாது. 

குறள் 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

தீயால எரிச்சு பொசுக்குத மாதிரி ஒரு கெடுதலை நமக்கு ஒருத்தன் செஞ்சிருப்பான். பொறவு ஒரு நேரத்துல நம்ம கூட இணக்கமா இருக்கலாம்னு நெனச்சு நம்ம கிட்ட வருவான். அப்பம் அவன் செஞ்ச கெடுதல் எல்லாத்தியும் மறந்து அவங்கிட்ட கோவப்படாம இருக்கது நல்லது. 

குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

மனசுல கோவப்படாம ஒருத்தன் இருந்தாமுன்னா, அவன் நெனச்சதெல்லாம் தடங்கல் எதுவும் இல்லாம ஒடனே நடக்கும். 

குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

நல்ல வசதி வாய்ப்பைக் கொடுக்கக் கூடிய பெருஞ் செல்வம் நமக்குக் கெடைய்க்கும்னாலும், அதுக்காக மத்தவொளுக்கு கெடுதல் செய்யாம இருக்கது தான் புனிதமானவங்களோட பண்பு. 

(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post