கொன்றைப் பூவிவளோ கொய்கிறாளே!

கொன்றைப் பூவிவளோ கொய்கிறாளே!


கொன்றைப் பூவிவளோ
கொய்கிறாளே எம் மனச
நானோ முகவரி 
தேடிடும்  சிலந்தி
உன் அப்பனோ 
இடையூறாகிடும் நந்தி
பருவம் கண்டு 
வெடிச்ச பருத்தி
கன்றாக ஏனோ 
பாயுது புத்தி
நின்றாப் போல் 
மேயுது சுத்தி
குத்தாம குத்திக்குது 
ஓரவிழிக் கத்தி
உனக்காக உள்ளத்தில் 
ஏத்திக்கவா  ஊதுபத்தி
போகாதே என்னுள்ளே 
போதைஏத்தி
கண்ணும் கண்ணும் 
பேசிக்கணும் முந்தி
அதற்காக காத்திருப்பேனடி 
கண்ணே செவ்வந்தி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்
மாற்றிய சாந்தி
சேர்ந்துக்கலாமோ  நாமும் 
மாலை மாத்தி
ம் எண்ணு சொல்லிப்புட்டா 
போட்டுக்குவேன்  பந்தி
ஆசையிலே உள்ளம் 
அடிக்குதம்மா தந்தி

ஆர் எஸ் கலா 


 



Post a Comment

Previous Post Next Post