ராஜகுமாரியின் சுயம்வரம்-40

ராஜகுமாரியின் சுயம்வரம்-40


போன வேகத்திலே எல்லோருமே தூங்கி விட்டார்கள்.நடு ராத்திரி தூக்கம் கண்ணைக் கட்டியது.  மறுநாள் காலை எழுந்ததும் அவர அவர் வீட்டுக்குள்ளே இரவு நடந்த சம்பவம் பற்றிப் பேசி அவர்களே கேள்வியும் கேட்டு 
விடையும் சொல்ல்லி முடித்தார்கள். 

இனி பிள்ளைகளைப் பாடசாலை அனுப்பி விட்டு  கணவன் மாரையும் காரியாலயம் அனுப்பி விட்டு வீட்டுப் பணிகளை முடிப்பதற்குள் மணி காலை பத்தாச்சு .அதன் பின்னே தான் மெதுவாக பாதை ஓரமாய் பார்வையை   விட்டார்கள்பாட்டியோட இரு மருமகள்களும் .

அந்த நேரம் பார்த்து அடுத்த தெருவில் இருக்கும் கணேசன்  என்பவரும் வந்து மெதுவாக வைக்கை நிறுத்தினார் .

அவரைப் பார்த்த சின்ன மருமகள் ."Good morning கணேசன்னா என்றாள் . அவரும் morning தங்கை" என்றவர் .மூத்த மருமகளைப் பார்த்துக் கேட்டார். "என்னம்மா? இரவு ஒரே சத்தமாகவே இருந்துச்சு. ஏதாவது தெரியுமா?" என்று.
  
அவள் அடக்கத்தோடு சொன்னாள் "இல்லிங்கநாங்களும் அதை அறியவே இந்தப் பக்கம் வந்தோம்" என்றாள். 

"ஓ அப்படியா?" என்ற கணேசன்  தொடர்ந்தார் .

"எல்லாம் இந்தக் காந்தன் பூசரியோட கூத்துத்தான். பேய் ஓட்றன் பிசாசு விரட்டுறன் என்று கூத்துக் காட்டுவதும். ஊரில் இருக்கும் பைத்தியங்களை எல்லாம் கொண்டு வாறதும் இவனுக்கு வேறு வேலையே இல்லை. முதலில் இவனுக்கு வாடகைக்கு வீடு கொடுத்த அந்த மஞ்சுவை அடிக்க வேணும் .காசி என்றாலே வாய்ப் பிளந்துடுவாள்." என்று திட்டித் தீர்த்து விட்டார்.

அப்போது மூத்த மருமகள் அமைதியாகவே கூறினாள் ."அவங்க என்ன செய்வாங்க. வீடு கேட்டு வரும் போது .நல்ல விதமாகப் பேசி இருப்பான். இப்போ தானே கொஞ்ச நாளாய் இந்த தொழிலை செய்ய ஆரம்பிச்சான்" என்றாள். 

"ஆமா ஆமா அண்ணே, முதல் அவன் இருப்பது கூட தெரியாது. நல்ல வேளை கணேசன் அண்ணா. பட்டணம் என்பதால் பிரச்சனை இல்லை. அவர்ரவர் வீட்டு வாசல் பூட்டியே இருக்கு. இதுவே கிராமம் என்றால் இன்னும் கஸ்ரமாகிடும் .இல்லக்கா?" எனக் கூறிக் கொண்டே மூத்தவளின்  முகம் பார்த்தாள் .

"ஓ நீ சொல்வதும் சரி தான்" என்றாள் மூத்தவ. 
மூவரும் பேசி விட்டு பிரிந்திடும் போது தான் அந்த வாகனம் வந்து நின்றது.  அப்படியே கால் நகராமல். அவர்களும் வேடிக்கை பார்த்தார்கள். வாகனத்தின் சத்தம் கேட்டதுமே அருகே இருந்த ஏனைய வீட்டிலும். ஜன்னல்கள் கதவுகள் என்று திற பட்டிச்சு.

தலையை மாத்திரம் நீட்டி வேடிக்கை பார்த்தார்கள் . அதே சத்தம் தான் மேரி அக்காவையும் அங்கே இழுத்து வந்திச்சு. அந்த வாகனத்தில் இருந்து அழகான ஆண் ஒருவன் இறங்கினான். அவர்களைப் பார்த்து விட்டு  காந்தனின் முற்றத்தை நோக்கி நடந்தான். 

(தொடரும்)


 



1 Comments

Previous Post Next Post