586 அடி ஆழமுள்ள குகையில் அனுப்பப்பட்ட கேமிரா.. மிரளவைத்த காட்சிகள் வைரல்

586 அடி ஆழமுள்ள குகையில் அனுப்பப்பட்ட கேமிரா.. மிரளவைத்த காட்சிகள் வைரல்


பள்ளங்கள், ஆழங்கள் மற்றும் குகைகளுக்குள் செல்ல மிகவும் பயமாக இருக்கும். ஆழமான குகைகளில் இருக்கும் பாதைகள் உண்மையில் மிகவும் பயங்கரமானவை. இருளான குகைகள் நம்மை அச்சுறுத்தும். வியர்த்து வடியும். இவ்வாறான குகைகளுக்குள் செல்வதை சாமானியர் யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். ஆனால், சில துணிச்சலானவர்கள் இந்த குகைகளில் நுழைகிறார்கள். அந்த வகையில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ட்வின்ஸ் என்ற YouTube சேனல் குழுவினர் ஒரு குகையை தேர்ந்தெடுத்து, பல மர்மங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

நேட் மற்றும் பென் ஆகிய யூடியூப்பர்கள் தங்களது சேனலில் கடந்த டிசம்பர் 2022ல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது மிகவும் அச்சுறுத்தும் வகையிலான வீடியோ என்று குறிப்பிட்டால் அது பொய்யே இல்லை. அதாவது, அமெரிக்காவில் ஜார்ஜியாவின் வாக்கர் கவுண்டியில் இருக்கும் ஆழமான குகைகளில் ஒன்றான எலிசன் குகைக்குள் GoPro வகை கேமராவை அனுப்பி, அங்கிருக்கும் காட்சிகளை பதிவு செய்தனர்.

இந்த GoPro கேமரா பூமியின் மேற்பரப்பில் இருந்து 586 அடி ஆழத்திற்கு சென்று, அங்கு இருள் நிறைந்த குகையில் இருந்த அனைத்துக் காட்சிகளையும் பதிவு செய்தது. இந்த குகை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு ஆழமானது. நீண்ட கயிறு வழியாக கேமராவை இறக்கிய நிலையில், அது பதிவு செய்த காட்சிகள் பலருக்கும் த்ரில்லான அனுபவத்தை கொடுத்துள்ளது.

பலரும் இந்த வீடியோவை பார்த்து சிலிர்த்துப் போன நிலையில், இருட்டில் பயங்கரமான ஒன்று மறைந்திருந்ததை பார்த்ததாக பலரும் தெரிவித்தனர். அதாவது, ஒரு மனிதனின் நிழலை அந்த குகைக்குள் பார்த்ததாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். ஆனால், அது பேய் என்று ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அங்குள்ள பாறைகளின் நிழல் அவ்வாறு தெரிந்திருக்கலாம் என்று ஒரு சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனிடையே, குகைக்குள் தண்ணீர் இல்லை. இது போன்ற குகைகளை ட்ரோன் மூலம் ஆராய்வது மிகவும் சுவாரஸ்யமானது என்று குறிப்பிட்டுள்ள சிலர், இது போன்ற குகைகளில் மனிதர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post