ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது மொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக 10 வருடங்களாக ஐசிசி தொடரில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளை இம்முறை உடைத்ததால் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைவரும் களத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டனர். குறிப்பாக கேப்டனாக தமக்கு முதல் உலகக் கோப்பையை பரிசாக கொடுத்த ரோகித் சர்மா ஃபைனல் நடைபெற்ற பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ண கொடியை நாட்டினார்.
அத்துடன் டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோக்கோவிச் போல பார்படாஸ் பிட்ச்சில் கொஞ்சம் மண்ணை எடுத்து திண்ற அவர் தமக்கு மறக்க முடியாத வெற்றியை கொடுத்த மண்ணுக்கு மரியாதையும் செலுத்தினார். இந்நிலையில் அதற்கான காரணம் பற்றி ஐசிசி இணையத்தில் ரோஹித் சர்மா பேசியுள்ளது பின்வருமாறு. “அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன்”
“ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வாக வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச் தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்”
“அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில் தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக் கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன். அது ஒரு அற்புதமான தருணம் என்பது உங்களுக்கு தெரியும். அது நடந்தாலும் நடக்கவில்லை என்று நாம் உணர்கிறோம்”
“ஆனால் அதுவே நடந்தது. அது மகத்தான தருணம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மழை புயல் காரணமாக பார்படாஸ் நகரில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது அங்கு மழை புயல் ஓய்ந்துள்ளது. எனவே சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களை பிசிசிஐ தனி விமானம் வாயிலாக நாடு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments