Ticker

6/recent/ticker-posts

திருமறையின் திருவசனம்..!


1.மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான்.3:4. 

2."சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்.அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்.11:85.

3.எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதை தொடரவேண்டாம்; நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே கேள்வி கேட்கப்படும்.17:36.

4.“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)3:8.

5.நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.3:10. 



 



Post a Comment

0 Comments