Ticker

6/recent/ticker-posts

ஒரே ஆண்டில் 1.36 லட்சம் I.T ஊழியர்கள் பணிநீக்கம்! AI வளர்ச்சி காரணமா?


தகவல் தொழில்நுட்ப (Information Technology) துறையில் நடந்து வரும் பல மாற்றங்களால் நாளுக்கு நாள் ஐ.டி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் அதிக வேலைவாய்ப்பு தரும் பணியாகவும், நிறைவான சம்பளம் கிடைக்கும் பணியாகவும் ஐ.டி வேலை இருந்து வந்த நிலையில், ஏராளமானோர் ஐ.டி சார்ந்த படிப்புகளை படித்து ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் AI தொழில்நுட்பத்தின் வருகையால் ஐடி துறையில் பெருமளவு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் கொரோனா கால பொருளாதார மந்த சூழலை தொடர்ந்து கூகிள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் என பல முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பில் ஈடுபடத் தொடங்கின. இவ்வாறு பல்வேறு காரணங்களால் ஐடி துறையில் வேலையிழப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெல் உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து 27 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் 422 நிறுவனங்கள் 1.36 லட்சம் ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து நம்பிக்கையற்ற நிலை ஐடி துறையில் நிலவுவது ஐ.டி பணியை நம்பியுள்ள பலரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது

webdunia


 Ai SONGS

 



Post a Comment

0 Comments