Ticker

6/recent/ticker-posts

Ad Code



முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வருமா? அச்சச்சோ!


முட்டை மனிதர்களுக்கு இயற்கை வழங்கிய ஒரு அற்புதமான உணவுப் பொருள். அதன் சுவையான தன்மை மட்டுமின்றி புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகவும் முட்டை விளங்குகிறது. ஆனால், முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு வரும் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. இந்தப் பதிவில் முட்டை மற்றும் மாரடைப்பிற்கு இடையேயான உண்மைகளை ஆராய்ந்து, ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டை சாப்பிடலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌ 

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால், இது இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், முட்டையில் உள்ள கொழுப்பு HDL எனப்படும் நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. இது LDL எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.‌

முட்டையில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதால், இதய நோய் வரும் என சிலர் கவலைப்படுகின்றனர். ஆனால், உண்மையில் ஒரு முழு முட்டையில் 200 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. இது எந்த வகையிலும் உடலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. தினசரி நமது உடலே தானாக கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். 

பல ஆய்வுகளில் முட்டை உட்கொள்வதால் இதய நோய் அபாயம் அதிகரிக்காது என கண்டறிந்துள்ளனர். உண்மையில் முட்டை சாப்பிடுவதால் இதய நோயின் அபாயம் குறையும் என்றே பரிந்துரைக்கப்படுகிறது. 

ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டை சாப்பிடலாம்? 

உடலில் எந்த பாதிப்பும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு 1-2 முட்டைகள் தாராளமாக சாப்பிடலாம். ஏற்கனவே சில மருத்துவ நிலை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி வாரத்தில் 3-4 முட்டைகள் சாப்பிடலாம். 

எனவே, முட்டையை தவறான உணவாக பார்க்காமல், அதை அவ்வப்போது சாப்பிட்டு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற்று ஆரோக்கியத்துடன் இருங்கள். அதே நேரம், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு, அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். 

kalkionline



 



Post a Comment

0 Comments