Ticker

6/recent/ticker-posts

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கை பிடித்துள்ள இடம்!


கடவுச்சீட்டு தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு(Srilanka) 93-வது இடம் கிடைத்துள்ளது.

கடவுச்சீட்டு தரவரிசை அமைப்பான Henley & Partners உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

மேலும், சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையில் இலங்கையின் 93-வது இடத்தை தெற்கு சூடானும்( South Sudan)பகிர்ந்துகொள்கிறது.

இலங்கையின் கடவுச்சீட்டு மூலம் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கமுடியும்.

இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜப்பான்(Japan), பிரான்ஸ்(France), இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.

இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 191 நாடுகளில் இலவச விசா நுழைவு கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 82வது இடம் கிடைத்துள்ளது.82வது இடத்தை இந்தியாவுடன் Senegal மற்றும் Tajikistan ஆகிய மேலும் இரண்டு நாடுகள் பகிந்துகொள்கின்றன.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil



 



Post a Comment

0 Comments