வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கும், தாம் நாட்டில் இருந்து வெளியேறியதற்கும் பின்னால், அமெரிக்காவின் சதி இருப்பதாக ஷேக் ஹசீனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, தனது அவாமி லீக் கட்சியினரிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்டின் தீவு மற்றும் வங்கக்கடல் பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
தாம் ஆட்சியில் தொடர்ந்து நீடித்திருந்தால், மாணவர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கூடும் என்று ஷேக் ஹசீனா தெரிவித்தாக கூறப்படுகிறது. மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறிய ஷேக் ஹசீனா, பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் இந்தியாவில் ஷேக் ஹசீனா செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments