அழுக்கா பேசாதீங்க.. நீங்க சொன்னது தப்பு.. ரோஹித் சொன்னதுமே முடிஞ்சு போச்சு.. ஷமிக்கு சல்மான் பட் பதிலடி

அழுக்கா பேசாதீங்க.. நீங்க சொன்னது தப்பு.. ரோஹித் சொன்னதுமே முடிஞ்சு போச்சு.. ஷமிக்கு சல்மான் பட் பதிலடி


ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று புதிய வரலாறு படைத்தது. மறுபுறம் பாபர் அசாம் தலைமையில் அமெரிக்காவிடம் தோற்று சுமாராக விளையாடிய பாகிஸ்தான் முதல் சுற்றுடன் நாட்டுக்கு கிளம்பியது. முன்னதாக அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். 

குறிப்பாக பவர்பிளே போல 13வது ஓவரிலும் அர்ஷ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பினார். எனவே அர்ஷ்தீப் பந்தை சேதப்படுத்துகிறாரா என்று நடுவர்கள் கவனிக்குமாறும் இன்சமாம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்தினால் போதும் என்று அடுத்த நாளே அவருக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்தார்.

அதற்கு உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த எங்களுக்கு நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள் என அவருக்கு இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்திருந்தார். அந்த சூழ்நிலையில் மரியாதைக்குரிய இன்சமாம் இந்தியாவின் அர்ஷ்தீப் பற்றி சொன்னது முட்டாள்தனமான கருத்து என்று முகமது ஷமி சமீபத்தில் பதிலடி கொடுத்தார். 

மேலும் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி ஆகிறது என்பதை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு வந்து செய்து காட்டுகிறேன் என்று ஷமி தெரிவித்திருந்தார். அத்துடன் இன்சமாம்-உல்-ஹக் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக இன்சமாம் தனது உறவினரான இமாம்-உல்-ஹக்கை தேர்வு செய்ததாகவும் ஷமி கூறுயிருந்தார். இந்நிலையில் முகமது ஷமிக்கு மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

“முகமது ஷமியின் கருத்துக்கள் இன்சமாம்-உல்-ஹக்கை குறி வைத்தன. குறிப்பாக அவர் தங்களுடைய உறவினர்களை தேர்வு செய்வதாக இன்சமாமை குறி வைத்து பேசினார். அது தவறானது. ஏனெனில் நீங்கள் இமாம் ரெக்கார்டை பாருங்கள். அவர் தனது சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் அணிக்கு வந்தார். சுமாராக செயல்பட்ட போது அவர் நீக்கப்பட்டார்”

“எனவே அவரைப் பற்றிய அர்த்தமற்ற கருத்துக்களை ஷமி சொல்லியிருக்கக் கூடாது. ஆம் இன்சமாம் சொன்ன சர்ச்சையான கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் பலரைப் போல இன்சமாம் தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதற்கு ரோஹித் சர்மா பதிலளித்த போதே அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் உறவினர்களை தேர்வு செய்தார் என்று ஷமி சொன்னது அழுக்கான பதிலடி. அது ஷமிக்கு பொருந்தாது. ஷமி தரமான பவுலரை போலவே இன்சமாம் தரமான கேப்டன்” என்று கூறினார்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post