குடியரசுக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக ஒஹாயோ செனட்டர் JD வேன்ஸ் நியமனம்

குடியரசுக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக ஒஹாயோ செனட்டர் JD வேன்ஸ் நியமனம்


அமெரிக்காவின் துணையதிபர் பதவிக்கான போட்டியில் ஒஹாயோ (Ohio) மாநில செனட்டர் JD வேன்ஸைக் (J.D. Vance) களமிறக்குவதாகத் திரு. டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். 
 
திரு. டிரம்ப் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமது துணையதிபர் வேட்பாளரை அறிவித்தார்.

விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தின் மில்வாக்கி (Milwaukee) நகரில் குடியரசுக் கட்சி 4 நாள் மாநாட்டை நடத்துகிறது.

திரு. டிரம்ப் மாநாட்டில் தமது பிரசாரத்தை  அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறார்.

"என்னுடன் அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நிலைக்குக் கொண்டுவர வேன்ஸ் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வார்," என்று அவர் சொன்னார்.

துணையதிபர் வேட்பாளராகத் திரு. வேன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் திரு. டிரம்ப்பைக் கடுமையாக விமர்சித்தார்.

திரு. டிரம்ப்பை 'அறிவற்றவர்' என்றும் 'அமெரிக்காவின் ஹிட்லர்' என்றும் திரு. வேன்ஸ் வருணித்ததுண்டு.

அவர் தற்போது திரு. டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக மாறியிருக்கிறார்.

கொலை முயற்சிக்கு ஆளான 2 நாள்களில்   திரு. டிரம்ப் துணையதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (14 ஜூலை) பென்சில்வேனியா மாநிலத்தில் அவர் பிரசார உரை ஆற்றியபோது 20 வயது தாமஸ் மேத்தியூ குரூக்ஸ் (Thomas Matthew Crooks) திரு. டிரம்பைப் படுகொலை செய்ய முயற்சி செய்ததாக நம்பப்படுகிறது.

திரு. டிரம்ப் சில காயங்களுடன் உயிர்தப்பினார்.

குரூக்ஸின் நோக்கத்தை இன்னமும் அறியமுடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

seithi



 



Post a Comment

Previous Post Next Post