Ticker

6/recent/ticker-posts

100 அடிக்கு சுனாமி; 2 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் - பகீர் எச்சரிக்கை!


மெகா நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஜப்பான், ரிங் ஆஃப் பையர் என்ற பகுதி பூமியின் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படும் பகுதியாக உள்ளது. அங்குள்ள ஹியுகனாடா கடலில் சமீபத்தில் தான் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது கடல் தட்டு இருக்கும் ஒரு டெக்டோனிக் ஹாட்ஸ்பாட் பகுதி. இதன் காரணமாக அங்கே அழுத்தம் ஏற்பட்டு ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா பூகம்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதன்படி, அடுத்த 30 ஆண்டுகளில் 8-9 ரிக்டர் அளவில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 70- 80% வாய்ப்புள்ளது.

அதைத் தொடர்ந்து 30 மீட்டர் உயரத்தில் அதாவது 100 அடி உயரத்தில் சுனாமி ஏற்படும். இதனால் அங்கே கடலோரப் பகுதிகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஷிசுவோகாவை இரண்டே நிமிடங்களில் இந்த சுனாமி தாக்கி அழிக்க வாய்ப்புள்ளது.

வகாயாமாவை மூன்று நிமிடங்களிலும் ஜப்பானின் கொச்சி நகரை ஐந்து நிமிடங்களில் தாக்கி அழிக்கும். அதன்படி தற்போது மக்களுக்கு "மெகா த்ரஸ்ட் பூகம்ப அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

ibctamilnadu


 



Post a Comment

0 Comments