1,200 யூத குடியேறிகள் அல்-அக்ஸா பள்ளிவாசலை தாக்கினர்

1,200 யூத குடியேறிகள் அல்-அக்ஸா பள்ளிவாசலை தாக்கினர்


இஸ்ரேலிய போலிஸ் பாதுகாப்பின் கீழ் ஜெருசலமில் ஆக்கிரமிக்கப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாசலை இன்று காலை நூற்றுக்கணக்கான யூத குடியேற்றவாசிகள் தாக்கியுள்ளனர்.

இதனை பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் (வஃபா) தெரிவித்துள்ளது.

ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய வக்காப் துறையின் கூற்றுப்படி, 

சுமார் 1,200 புலம் பெயர்ந்தோர் அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் குழுக்களாக நுழைந்து அங்கு ஒரு சில சடங்குகளை செய்தனர்.

இது திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்-அக்ஸா பள்ளிவாசல் பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைவதைத் தடுக்க இஸ்ரேலிய போலிஸ் செயல்பட்டது.

ஆனால் முஸ்லிம்களின் புனித ஸ்தலத்திற்குள் யூத குடியேற்றவாசிகள் நுழைவதற்கு வசதியாக அதன் படைகளை நிலைநிறுத்தியது.

இஸ்ரேலிய போலிஸ் பழைய ஜெருசலேம் நகரத்தை ஒரு கோட்டை இராணுவ மண்டலமாக மாற்றியதையும் அது வெளிப்படுத்தியது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post