Ticker

6/recent/ticker-posts

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய்த் தடுப்பூசி 7 நாடுகளில் சோதனைக்கு உட்படுத்தப்படும்


உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசியை மருத்துவர்கள் சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதனால் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

புற்றுநோய் ஏற்படுத்தும் மரணங்களில் பெரும்பாலானவை நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுபவை என்று The Guardian செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் பேர் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைகின்றனர். 

புற்றுநோய் உயிரணுக்களைத் தேடிக் கொல்லும் தடுப்பூசியை இப்போது நிபுணர்கள் சோதனை செய்கின்றனர்.

அந்த உயிரணுக்கள் மீண்டும் உருவாவதையும் அது தடுக்கும்.

BNT116 என்றழைக்கப்படும் அந்தத் தடுப்பூசியை BioNTech நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தத் தடுப்பூசி 7 நாடுகளில் இருக்கும் 34 ஆய்வுக்கூடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, ஸ்பெயின், துருக்கியே ஆகியவையே அவை.

இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் 6 ஆய்வுக்கூடங்கள் அமைந்துள்ளன.

அங்குதான் முதல் பிரிட்டன் நோயாளிக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பக்கட்டத்திலிருந்து கடைசி கட்டம் வரை இருக்கும் சுமார் 130 நோயாளிகளுக்குத் தடுப்பூசி போடப்படும்.

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

0 Comments