இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்ற கையோடு தனது பதவியில் இருந்து வெளியேறினார். அவர் பதவியில் விலகிய கையோடு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் தற்போது புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரும் அவரது தலைமையின் கீழ் அவருக்கு ஏற்ற பயிற்சியாளர்கள் குழுவும் இந்திய அணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். கம்பீரின் தலைமையின் கீழ் தற்போது தான் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பராஸ் மாம்ப்ரே தற்போதைய இந்திய அணியில் சிறந்து விளங்கும் ஆபத்தான பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
பும்ரா மற்றும் முகமது ஷமி இருவரும் தான் தற்போதைய இந்திய அணியில் ஆபத்தான பந்துவீச்சாளராக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக புதுப்பந்தில் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இணைந்து வீசினால் எதிரில் எந்த பேட்ஸ்மேன் இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. புதுப்பந்தினை வீசுவதில் இவர்களை விட சிறந்த பந்துவீச்சு ஜோடி இருக்காது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இருவருமே வித்தியாசமான பந்துவீச்சாளர்கள். பும்ரா குறைந்த தூரமே ஓடி வந்தாலும் நல்ல வேகத்துடன் யார்க்கர் வீசும் பவுலர் என்பது மட்டுமின்றி வித்தியாசமான ஆக்ஷனையும் உடையவர். அதே வேளையில் முகமது ஷமி கிரிக்கெட்டுக்கு உண்டான வகையில் மிகச் சிறப்பாக ஓடிவந்து அப்ரைட் சீமில் வீசும் ஒரு பந்துவீச்சாளர்.
அவரது பந்து தரையில் பட்டு உள்ளே செல்கிறதா? வெளியே செல்கிறதா? என்று தெரியாது. அந்த அளவிற்கு அவரும் சிறப்பான பந்துவீச்சாளர். இவர்கள் இருவரும் இன்னிங்சை துவங்கும் போது நிச்சயம் எந்த ஒரு பேட்ஸ்மனாக இருந்தாலும் அவர்களை சமாளிப்பது மிகவும் கடினம் தான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments