ஜனாதிபதித் தேர்தலில் கூட்டுசேர்ந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமுக்கு அழைப்பு விடுத்து, ஹந்தானை பெருந்தோட்டக் காணியொன்றை கைமாற்றிக் கொள்வதற்கு முன்னெடுத்த டீலை தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க அம்பலப்படுத்தினார்.
இன்று (10) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்…
”இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்துகொள்ளும் வித்தையினை, நிர்வாணத்தை அம்பலப்படுத்துவதற்காகும். பணம் மாத்திரமல்ல, பார் லைசன்ஸ், காணிகள், வீதிகளை புனரமைப்பதற்கான கொந்தராத்து ஆகிய பல்வேறு விதமான இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
இதுவரையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையின் காணிகளில் பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் 50 ஏக்கருக்கு அதிகமான காணியை வைத்துக்கொள்ள முடியாது என்ற சட்டம் இருக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமது நெருக்கமானவர்களின் காணிகளையும் அரசாங்கத்தின் பெறுமதிமிக்க வளங்களையும் கைமாற்றிக்கொண்டார். லக்ஷ்மன் கிரிஎல்லவின் மனைவிக்காக ஹந்தானையில் காணியைப் பெற்றது போல ரணில் விக்ரசிங்கவுடன் இணைந்து கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கபீர் ஹாசிம் உடனான பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான ஹந்தான பெருந்தோட்டத்தில் 12 ஏக்கர் 03 றூட் 53 பர்ச்சஸ் அளவுடைய காணி தொடர்பான கள்ளவியாபாரமொன்று ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கும் சஜித் பிரேமதாசவின் எதிர்கட்சி குழுவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்கவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு கள்ளவியாபாரம் இந்தக் காணிப் பரிமாற்றம் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் கோப் குழுவில் விசாரணை முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால், கோப் குழுவை செல்லுபடியற்றதாக்க இடமளித்து குறித்த அறிக்கையை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடிதங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கபீர் ஹாசிமின் மகனுக்கு ஹந்தானையில் 12 ஏக்கர் 03 றூட் 18.53 பர்ச்சஸ் அளவிலான காணியைக் கொடுக்கும்படி, காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் ஜனவசம தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பெப்ரவரி மாதத்தில் ஜனவசமவிடம் இருந்து குறித்த காணி வேறாக்கப்படுகின்றது. அத்துடன், அந்தக் காணியை பரிமாற்றிக் கொள்வது தொடர்பான விடயங்கள் அம்பலமானதால் கபீர் ஹாசிமிற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலை நிறைவசெய்துகொள்ள இயலாமல் போனது.
1972 காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்பிருந்த நிலைமையை முன்வைத்து கபீர் ஹாசிம் இந்த டீலை பேசியுள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய காணியின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மிகமுக்கியமான கடிதங்கள் தற்போது காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் மூலமாக தனது மகனான எம்.எச்.எம். கபீரின் பெயருக்கு காணியை மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்ட எல்லா விபரங்களும் எங்களிடம் உள்ளது.
இந்த இடத்தில் இருப்பது நிர்ணயித்துக்கொள்வதைப் போல் பாசாங்கு செய்து ஜனவசமவிற்கு சொந்தமான காணிகளை அரசியல்வாதியொருவர் கொள்ளையடித்தமையாகும். கடந்த காலத்தில் அரசாங்கத்தின் நண்பர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க்பட்டன. இப்போது இடம்பெறுவது அரசாங்கமும் எதிர்கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரிவும் ஒன்றுசேர்ந்து காணிகளை கொள்ளையடிப்பதாகும். கடந்த காலத்தில் பார் லைசன் பகிர்ந்துகொள்ளல், ஷெட் பகிர்ந்துகொள்ளல், பஸ் பேர்மிட் பகிர்ந்துகொள்ளல் மேற்கொள்ளப்பட்ட விதத்திலேயே இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹந்தானையில் ஜனவசமவிற்கு சொந்தமான தோட்டத்தின் நடுவில் 45 ஏக்கர்களை தனியார் கம்பனியொன்றுக்கு கொடுக்க தயார் நிலை காணப்படுகிறது.
ஹந்தான தோட்டத்தின் நடுவில் தோட்டமொன்று தனியார் கம்பனியொன்றுக்கு உரித்தாகியுள்ளது எனக் கூறி இந்த கள்ளவியாபாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். அதைப்போலவே, பலவிதமான மாதிரிகளை கடைப்பிடித்து இப்பொழுது அவர்கள் இரண்டாக பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு பணம் தேடிக்கொள்வதற்காக ஹில்டன் ஹோட்டல், போகம்பர சிறைச்சாலை இருந்த காணி என்பற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
அரசாங்கம் மாத்திரமல்ல, தாம் எதிர்கட்சியினரே எனக் கூறிக்கொண்டு இதுவரை முன்னெடுத்துவந்த கள்ளவியாபாரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தலை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் அம்பலப்படுத்திய இந்த தகவல்கள் சம்பந்தமாக சீக்கிரமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே, இந்த ஊழல்பேர்வழிகளை ஒரே வரிசையில் வைத்து தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான முற்போக்கான மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.”
lankatruth
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments