Ticker

6/recent/ticker-posts

காசாவில் உள்ள பள்ளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்


காசா நகரில் உள்ள அல்-தபின் பள்ளி மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை மலேசிய அரசு வன்மையாக கண்டிக்கிறது என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

பாலஸ்தீன மக்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்ட பள்ளி மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது சர்வதேச சட்டம், மனிதாபிமானம், மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

மேலும் மனித குலத்திற்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைதியை அடையும் எண்ணம் ஒரு துளிகூட தமக்கு இல்லை என்பதை இஸ்ரேலிய ஆட்சி மீண்டும் ஒருமுறை தெளிவாகக் காட்டியுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் கொடூரமாகக் கொல்வது தொடரும்போது சர்வதேச சமூகம் இஸ்ரேல் பிரதமரையும் அதன் இராணுவ நடவடிக்கைகளை யும் கட்டிப்பிடித்து கொண்டிருப்பது மிகவும் மோசமான ஒன்று என்று  அமைச்சு கூறியது.

nambikkai



 



Post a Comment

0 Comments