இந்தியாவில் ஒரு பெரிய சம்பவம் நடக்கபோகிறது - எச்சரிக்கை விடுத்த முன்னனி ஆய்வு நிறுவனம்!

இந்தியாவில் ஒரு பெரிய சம்பவம் நடக்கபோகிறது - எச்சரிக்கை விடுத்த முன்னனி ஆய்வு நிறுவனம்!


ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டுள்ள பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் தான் ஹிண்டன்பர்க். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் அதானி குழு நிறுவனங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதனிடையே தங்கள் குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது.

உண்மையில் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது. இந்த சுழலில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கபோகிறது.." என்ற பதிவு தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனம் என்பதால் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.   

ibctamilnadu



 



Post a Comment

Previous Post Next Post