Ticker

6/recent/ticker-posts

இது தான் உண்மையான் மதிப்பு.. பட் கமின்ஸ், ஸ்டார்க்கை ஈஸியா விராட் கோலி முந்திடுவாரு.. ஹுக் எட்மீட்ஸ்


ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அடிப்படை அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் அந்த விதிமுறையை மாற்றியமைத்து 7 – 8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் ஐபிஎல் நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

முன்னதாக கடந்த வருடம் துபாயில் 2024 ஐபிஎல் தொடரின் மினி ஏலம் நடைபெற்றது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார். இருப்பினும் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2008 முதல் இப்போது வரை விளையாடி ஐபிஎல் தொடர் புகழ்பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அவர்கள் கூட தங்களுடைய வாழ்நாளில் 20 கோடி சம்பளத்தை பெற்றதில்லை. 

அதனால் அதிருப்தியடைந்த  இந்திய ரசிகர்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது விராட் கோலி நேரடி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் 30 கோடிக்கு மேல் விலை போவார் என ஏலதாரர் ஹுக் எட்மீட்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஸ்டார்க், கமின்ஸ் போன்ற வெளிநாட்டவர்களை விட விராட் கோலி அதிக மதிப்பு மிக்கவர் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை ஏலத்தில் அழைப்பது மிகவும் அற்புதமான கௌரவமாக இருக்கும். விலையைப் பொறுத்த வரை அவர் 3000 லட்சத்திற்கும் மேல் சாதிப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏலத்தில் பலமுறை இளம்  இந்திய வீரர்களை வாங்க ஐபிஎல் அணிகள் போரிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வருண் சக்கரவர்த்தியை சொல்லலாம்”

“2019 ஏலத்தில் 20 லட்சம் அடிப்படை விலையில் கலந்து கொண்ட அவர் கடைசியில் 840 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அணியின் நலனுக்காக தனது சம்பளத்தை அவர் 16 கோடியிலிருந்து 12 கோடியாக குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

0 Comments