Ticker

6/recent/ticker-posts

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி... ரசிகர்கள் அதிர்ச்சி!


ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்து. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு இறுதி போட்டி வரை முன்னேறினார்.

இறுதிப்போட்டி தொடங்கும் முன்பு அவரது எடை 100 கிராம் அதிகம் காணப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உடைந்து போன வினேஷ் போகத் உரிய எடையுடன் இறுதிப் போட்டி வரை சென்ற தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வினேஷ் போகத் தரப்பில் காணொளி வாயிலாக இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். வினேஷ் போகத்தின் வழக்கை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் விசாரணை செய்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவது தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் வினேஷ் போகத் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

news18


 



Post a Comment

0 Comments