ஈரான் துணை அதிபர் பதவி ஏற்ற 11 நாட்களில் திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி என்பவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் அதன் பிறகு நடந்த பொதுத்தேர்தலில் பெஸஷ்கியான் என்பவர் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.
மேலும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜரீப் என்பவர் துணை அதிபராக ஆகஸ்ட் 2ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஈரான் நாட்டின் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு பெண் உள்பட 19 அமைச்சர்கள் பதவி ஏற்க இருந்தனர்.
இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் துணை அதிபர் முகமது ஜரீப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைப்பதில் தனக்கு அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக தான் பதவி விலகி இருப்பதாக அவர் கூறியிருப்பது ஈரான் நாட்டின் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments