Ticker

6/recent/ticker-posts

அச்சம் தரும் மற்றொரு நோய்; மங்கிபொக்ஸ்!


கொரோனா தொற்றின் கொடூரமான தாக்கத்திலிருந்து உலக மக்கள் இப்போதுதான் சற்று மீண்டும் வந்துள்ளார்கள். ஆனால் அதன் பின்னர் அவ்வப்போது பல வைரஸ் தொற்றுகள் தங்கள் கோர முகத்தை காட்டி அச்சுறுத்தியுள்ளன. இப்போது அந்த வரிசையில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையும் மக்களிடையே பீதியை கிளப்பி,  வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுதும் மங்கிபொக்ஸ் எனப்படும் இந்தக் குரங்கு அம்மை பீதியை கிளப்பி வருகிறது.

ஆப்பிரிக்காவின் காங்கோவில் தொடங்கிய இந்நோய்,  தற்போது பாகிஸ்தான், ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பரவி இறுதியாக சிங்கப்பூர் வரை வந்துவிட்டதாக தகவல்கல் கிடைத்துள்ளன. இதன் காரணமாக உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பாதிக்கப்பட்ட நபர்களுடனும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. இந்நோய் மனிதர்களையும், விலங்குகளையும் தாக்குகின்றது.இது தொற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 7-14 நாட்கள்; அறிகுறிகள் காணப்படும் காலம் 2-4 கிழமைகள்.
1958ம் ஆண்டிலேயே முதன் முதலாக  டென்மார்க்கில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டார். அதுமுதலே  ஆங்காங்கு இந்த நோய் தலைதூக்கியபோதிலும், இப்போது அதன் பரவல் துரிதமடைந்துள்ளது.

காங்கோவில் சுமார் 16,700 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 570 பேர் இறந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை சுமார் 115 நாடுகளில்  இந்நோய் பரவியுள்ளது.  இந்தியாவில் கடந்த  மார்ச் மாதமுதல் 30 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். 

இதன் அறிகுறிகள்:

- உடலில் சீழ் நிறைந்த கொப்புளங்கள்
- காய்ச்சல்
- தலைவலி
- தசைகளில் வலி
- முதுகு வலி
- பலவீனம்
- தொண்டையில் வீக்கம்

தற்போது வரை, குரங்கு அம்மை காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் இல்லாததால்,  இதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதாக அறிய முடிகின்றது. இருப்பினும், குரங்கு அம்மை அறிகுறிகள் தோன்றினால், அந்த நோயாளிக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்குவது குணமடைவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
குரங்கு அம்மையைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான விஷயம், விலங்குகளுடன் பாதுகாப்பற்ற தொடர்பைத் தவிர்ப்பது என உலக சுகாதார அமைப்பான WHO பரிந்துரைக்கிறது. நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த விலங்குகளை பாதுகாப்பின்றி தொடுவதையும் அவற்றின் இறைச்சியை உண்பதையும் தவிர்க்க வேண்டும். இது தவிர, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

செம்மைத்துளியான் 


 Ai SONGS

 



Post a Comment

0 Comments