YouTube முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்

YouTube முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்


YouTube நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வொஜ்கிக்கி (Susan Wojcicki) மாண்டார்.

அவருக்கு வயது 56.

சூசன் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் அவதிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 'X' தளத்தில் பதிவிட்டார்.

"இரு ஆண்டுகள் புற்றுநோயால் அவதிப்பட்ட சூசன் மரணம் அடைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவர் இல்லாத உலகை கற்பனை செய்ய கடினமாக இருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

சூசன் 9 ஆண்டுகள் YouTube தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு அவர் பதவி விலகினார்.

சூசன் முன்னர் Google நிறுவனத்திலும் வேலை செய்திருக்கிறார்.

seithi



 



Post a Comment

Previous Post Next Post