திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-156

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-156


குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

நம்ம விதி அழிவு தரக்கூடியதா இருந்தா, நமக்கு அறியாமை தான் வரும். அதே இது நம்மை ஒசத்தக் கூடியதா இருந்தா நம்ம அறிவு பெருகும். 

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

இந்த ஒலகம் ரெண்டு வகையா வேறுபட்டது. ஒருத்தரு பணக்காரரா இருக்கதும், இன்னொருத்தரு அறிவாளியா இருக்கதும் தான் அந்த வேறுபாடு. 

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

சில நேரம் ஒருத்தன் நல்லது செஞ்சா கெட்டதா மாறும். கெட்டது செஞ்சாக்கூட நல்லதா மாறிடும். இதுல்லாம் தான் விதிங்கிறது. 

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

நம்ம விதி நல்லா இல்லாட்டா, எந்த செல்வமும் நம்மகிட்ட தங்காது. விதி நல்லா இருந்தா, வேண்டாம்னு ஒதுக்கினாலும், நம்மட்ட இருக்க செல்வம் நம்மை விட்டு போகாது. 

குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

கோடி கோடியாச் சேத்து வச்சிருந்தாலும், நம்ம தலையில என்ன எழுதியிருக்கோ அது படிதான் நம்ம அதை அனுபவிக்க முடியும். நம்ம ஆசைப்படுத மாதிரில்லாம் அனுபவிக்கணும்ங்கிறது நடக்கிற வழி இல்லை. 

(தொடரும்)

 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post