Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -63


குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் 
எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

நெஞ்சமே! 
கவிதாவ பாரு 
மரத்தடில உட்கார்ந்து எ
ன்னுடைய நெனப்பு 
கொஞ்சங்கூட இல்லாம 
படிச்சுக்கிட்டுருக்கா! 
அதுக்கு அவளுடைய
நெஞ்சும் ஒத்துழைக்குது!
நீயும் இருக்கியே! 
என்ன வகுப்பறையில 
உட்காரவிடாம 
அவளையே நெனச்சுக்கிட்டு 
இங்கேயே கூட்டிக்கிட்டே 
வந்துட்டியே! சீ!

குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நெஞ்சமே! 
பத்துநாளா 
அந்தப் பாமதி 
நம்மள கண்டுக்கவே இல்ல! 
அவ நாலாவது நான் அய்ந்தாவது! 
எனக்கு முந்தின வரிசையிலதான் 
நிக்கிறா! 
அவசிரிக்ககூட இல்ல! 
நட்பு பாராட்டல! 
ஆனா நீயோ 
அவ வெறுக்கமாட்டானு 
முந்திரிக்கொட்டை மாதிரி 
முந்திமுந்தி போறயே! 
இதுசரியா?

குறள் 1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ 
நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.

நெஞ்சே! 
நானே பேசாமல் 
இருக்கின்றேன்! 
நீயோ மலர்விழியின் 
பின்னாலேயே செல்கின்றாயே! 
அவள் என்னை மதிப்பதே 
இல்லை!
துன்பத்தில் உள்ளவர்க்குத் 
துணையாக நண்பர் இல்லை 
என்பதற்காகவோ 
இப்படி நடந்துகொள்கிறாய்?

(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

0 Comments