Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ராஜகுமாரியின் சுயம்வரம்-48


பாட்டியின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் கொட்டியது.

சற்று மௌனத்திற்குப் பிறகு  பாட்டியே மருமக்களிடம் கூறினார் 
"அது வேறு யாரும் இல்லை நான் வளர்த்த வளப்புப் பிள்ளை" என்றார்.
 
"வளர்த்த பிள்ளையா? அத்தை" என்றாள் மூத்த மருமகள். 

"ஆமாம் அம்மா பதினைந்து வயது வரை என்னிடம் வளர்ந்தான் இவர்களோடு ஒன்றாக. .அதன் பின் அவனோட அப்பா வந்து என் மகனை அனுப்பு என்று என்னோடு  சண்டை போட்டுக் கூட்டிட்டுப் போய்ட்டான் படுபாவி. அவன் இல்லாம நாங்க எத்தனை நாள் வேதனைப் பட்டோம் .ஒரு நல்ல நிகழ்வுகள் வந்தால் எங்க வீடே சோகமாகிடும்.  இதோ மூத்தவன் அவன் மேல் பாசம் அதிகம் இவர்களை விட நான்கு வயதில் பெரியவன், எட்டு வயதில் வந்தான்" என்றார் பாட்டி.

சின்னவள் கேட்டாள் "இதை யாரும் பேசவே இல்லையே எங்களிடம்" என்று.

"அவன் எங்கு என்றே தெரியாது இப்போ அவனுக்கு 50 வயதாகிறது இவ்வளவு காலத்துக்குப் பின் சந்திப்போம் என்று யார் நினைத்தோம்"  .என்றார் பாட்டி. 

 "ஏன் பெரியம்மா அவர் அம்மா எங்கே" என்று மேரி அக்கா கேட்டார். 

"அவனோட அம்மா எனது பெரியப்பா பொண்ணு தான் நான் சின்னம்மா முறை. அவள் அவனோட புருசன் தொல்லை தாங்காம மருந்து குடித்சு இறந்துட்டாள்."

" ஓ அப்படியா" என்றாள் மேரி அக்கா.  

"அம்மா அண்ணாவுக்குப் பிடித்தவை குழிப்பணியாரம், குருமா,  நண்டு வறுவல், எல்லாம் நாளை சமையுங்கள்" எஎன்றான் மூத்தவன்.

 உடனே பாட்டி மூத்தவளைப் பார்த்து "இந்தா மா நாளை எல்லோரும் அழகா உடுத்திக் கொள்ளுங்கள்  நகை எல்லாம் போட்டு படிச்ச பொண்ணாகவே நில்லுங்க. அவன் கவனிப்பான் "என்றார் .

அதோடு எல்லோரும் கலைந்து  அவரவர் வேலைக்குப் போனார்கள்  . அப்படியும் இப்படியும் நேரம் எட்டாச்சு இரவு உணவை முடித்து விட்டு நாளையச் சமையலுக்குத் தேவையானதை இப்போதே தயார் செய்து வைத்து விட்டு தூங்கப் போனார்கள். சின்னவ மட்டும் நாளை எதைப் போடலாம் எதை உடுத்தலாம் என்று மனக் கணக்குப் போட்டு முடித்துத் தூங்கிட நடு இரவாச்சு. 

காலையிலே ஆரம்பித்து விட்டது பரபரப்பு. மகன்மார் பழங்கள் வாங்கி வந்து வெட்டி வைத்தார்கள். வரவேற்பு அறையை அலங்காரம் செய்தார்கள். பாட்டியும் அன்று அழகிய சேலையும் முடிமயிர் வைத்துக் கொண்டையும் போட்டார்.
 
எல்லாம் முடிந்தது மருமக்கள் இருவரும் அழகிய சுடிதார் போட்டு அனைத்து நகையும் போட்டு பிள்ளைகளையும் தயார் செய்து விட்டு வழி பார்த்து நின்றார்கள். சரியா 11 மணி அளவில் அழகிய கார் ஒன்று வந்து  நின்றது. 

மோகன் தன் குடும்பத்தோடு வந்தான்.இரண்டு ஆன் பிள்ளைகள்,ஒரு பெண்பிள்ளை மற்றும் மனைவியோடு வந்திருந்தான்.

(தொடரும்)

 Ai SONGS

 



Post a Comment

0 Comments