Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-57


290.வினா: அறிவு எத்தகைய கருவி?
விடை: அழிவிலிருந்து காக்கும் கருவி 
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்,(421)

291.வினா: அறிவை எவ்வழியில் செலுத்த வேண்டும்?
விடை: தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்த வேண்டும் 
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.(422)

292.வினா:எது உண்மையான அறிவு?
விடை:எதிலும் உண்மைப்பொருள் காண்பதே 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.(423)

293.வினா:அறிவுடையவர்களுக்கு எது தெரியும்?
விடை: நடக்கப் போவது தெரியும் 
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.(427)

294.வினா:எது பேதைமை?
விடை: அஞ்சுவதற்கும் அஞ்சாதிருப்பது பேதைமை 
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்,(428)

(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

0 Comments