Ticker

6/recent/ticker-posts

தோல்விக்கு பின் தூளான பாகிஸ்தானின் கனவு? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் புள்ளிப்பட்டியல்.. இந்தியாவின் வாய்ப்பு


வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் அந்த 2 போட்டிகளிலும் வென்ற வங்கதேசம் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைத்தது. 

மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக அதுவும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்து அவமான சாதனையை படைத்தது. சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற அணிகளிடம் ஐசிசி தொடரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. ஆனால் தற்போது சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் அந்த அணி தோற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அப்டேட் செய்யப்பட்ட புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் வங்கதேசத்திடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 8வது இடத்திற்கு சரிந்துள்ளது. குறிப்பாக இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி வெறும் 19.05% புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் தங்களுடைய அடுத்த போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் டாப் 2 இடத்தை பிடிப்பதற்கு 99% வாய்ப்பில்லை. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு 99% வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். 

எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற வேண்டும் என்ற பாகிஸ்தானின் கனவு கிட்டத்தட்ட நொறுங்கியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே 2021, 2023 ஃபைனல்களில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெறவில்லை. 

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற வரலாற்று வெற்றியையும் சேர்த்து வங்கதேசம் 45.83% புள்ளிகளைப் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் இங்கிலாந்து (45.00) 5வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா (62.50%) மற்றும் நியூசிலாந்து (50.00%) அணிகள் 2, 3வது இடங்களில் உள்ளன. 68.52% புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 

தற்போதைய நிலைமையில் இந்தியா அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதில் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொடர்களில் வென்றாலே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் தொடரில் மோசமாக தோற்கவில்லையெனில் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும். ஒருவேளை ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தால் முதல் அணியாக இந்தியா ஃபைனலுக்கு செல்லும்.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

0 Comments