Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-4

வள்ளுவரின் திருவுருவப்பட வரலாறு


மனிதனின் வாயைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மனிதனின் வாய் அகன்றிருக்கக் கூடாது. குறுகியும் இருக்கக் கூடாது, மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது: அப்படியிருந்தால், அவனுக்கு வாய்மைத் திறன் வாய்க்காது என்பது. ஒரு நெறி. ஆகையால், நாம் எடுத்துக கொண்ட செயல், சொல்லுகின்ற திறன் நல்லபடி வாய்க்க வேண்டும் என்று எண்ணி அதில் வெற்றியும் கண்ட வள்ளுவருக்கு, அவரது வாயும் உதடுகளும் அளவாகவும் அழகாகவும் இருந்திருக்கும் எனக் கருதி, அவரது 
வாயும் உதடுகளும் வரையப்பட்டன.

கருணையுள்ளங் கொண்டவர்களின் கண்களில் எப்பொழுதும் கருணை ததும்பும் அமைதி குடிகொண்டிருக்கும்.

உலகின் மீது உள்ளக் கருணையினாலும், உலகம் நல்லபடி உய்ய வேண்டும் என்று வள்ளுவர் எண்ணியதாலும் நான், அவர் திருக்குறள் எனும் பொதுமறையை யாத்துள்ளார் என்பதால், ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி. பொது நோக்கு ஆகியவைகள் நிரம்பிய கண்கள் அவருக்கு இருந்திருக்க வேண்டும் என எண்ணி வள்ளுவருக்கு அத்தகைய குறிகள் உள்ள கண்கள் தீட்டப் பட்டன.

பொதுவாக அறிஞர்கள் சிந்திக்கின்ற போது. தமதுக் கண்ணின் புருவத்தை உயர்த்தியோ, சுருக்கியோ சிந்திப்பார்கள். அப்படிச் சிந்திப்பதனால், ஒரு தெளிவு மனதில் ஏற்படுகிறது. வள்ளுவர் நமக்குத் தந்த குறளில் நல்ல தெளிவு காணப்படுவதால், தமது கருத்துக்களைச் சொல்லச் சிந்திக்கும் போது, தன் வலது கண் புருவங்களை சற்று உயர்த்தி சிந்திப்பதாக வளைத்துக் தீட்டப்பட்டது.

கல்வி, கேள்வியறிவு உள்ள மனிதர்களுக்கு. காதுகள் சற்று பெரிதாக இருக்கக் காண்கிறோம். சான்றாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், காந்தியடிகளுக்கு காதுகள் மிகப் பெருத்து இருந்ததைக் காணலாம். ஆக, காதுகள் சற்றுப் பெருத்தவர்களே நல்ல கல்வியறிவும், கேள்வியறிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பதால் வள்ளுவருக்கு நீண்ட அகன்ற காதுகள்! பலப்பல ஆண்டுகாலமாக அவர் கற்றக் கல்வியினாலும் உலகியல் அறிவினாலும், நல்ல கருத்துகளை தவின்றமையால், அவருக்கு நீண்டகன்றக் காதுகள் தீட்டப்பட்டன.

நாம் உண்ணும் உணவு அளவோடு இருந்தால் எவ்விதமான நோயும் வாராது. எவ்விதமான மருந்துகளையும் நாம் தேடும் அவசியமும் வராது, என்றும் அளவாக உண்ணுபவரிடத்தில் இருக்கும் இன்பம் போல, அளவுக்கு அதிகமாக உண்பவரிடத்தில் அளவுக்கு அதிகமான நோயும், அதனால் துன்பமும் இருக்கும் என்பதைப் போன்ற நலமாக வாழக்கூடிய வழிகளைச் சொன்ன வள்ளுவர், தானும் அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்திருக்க வேண்டும். அதனால் அவருக்கு எந்தவிதமான உடலைப் பற்றும் நோய்களும் நேர்ந்திருக்காது. நல்ல உறுதியான உடல் பெற்று இருந்திருக்க வேண்டும். நல்ல வலிமையோடு விளங்கியிருந்திருக்க வேண்டும். அதனால், உடம்பு தன்னுடைய ஊட்டத்தினின்றும் இலைத்து இருந்திருக்காது என்பதாலும்,வள்ளுவர், காமம், குரோதம், பேராசை, கோபம் போன்ற உட்பகையை வென்ற சிறந்த பேராண்மை மிக்கவராக இருந்திருக்க வேண்டும் என்பதாலும், ஆரோக்கியத்துடனும், நல்ல கட்டுக் கோப்புடனும் பண்பட்டும் இருந்திருக்க வேண்டும் என்பதாலும், வள்ளுவரின் உடளை உறுதியான உடலாகத் தீட்டப்பட்டது.

உலகப் பற்று சமயப் பற்று ஆகியன போன்ற பற்றுகளில் இருந்து வள்ளுவர் விலகியிருந்தார் எனவும், ஏதாவது ஒரு மதத்தையோ, ஏதாவது ஒரு மொழியைத் தழுவியோ வள்ளுவர் தமது குறளில் எழுதவில்லையாம்! அப்படி மத, மொழிகளைப் பற்றி குறளில் குறிப்பிட்டிருந்தால் மத. தேச வேறுபாடுகளின்றி. எல்லோரும் அதைத் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருவதும் நிகழ்ந்திருக்காதாம்! மேலும் வள்ளுவர் வாழ்ந்த கால கட்டத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய மத சமய வெறியர்களிடமிருந்து எந்த விதக் கருத்து வேறுபாட்டினையும் காண முடியவில்லை என்பதால், வள்ளுவர் பொதுவான கருத்துக்களைத் தமது திருக்குறளில் கூறியுள்ளமையால், திருவள்ளுவருக்கு... அவரது திருவுருவப் படத்துக்கு சமய குறிப்புகளை உணர்த்தும் படியாகவும். மதச்சின்னங்களை நினைவுபடுத்துவன போன்ற குறிகள் இல்லாமலும் வள்ளுவரின் உருவம் தீட்டப்பட்டதாம்!

திருவள்ளுவரின் அகன்ற மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள உரோமங்கள், அவர் ஏற்ற நற்பணியை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்மையைக் குறிப்பனவாகும். தூய்பை நிறைந்த உள்ளம்; தூய்மை நிறைந்த நோக்கு தூய்மை நிறைந்த வாக்கு; தூய்மை பெற்ற உடல்; தூய்மையான குறிக்கோள் ஆகியன வள்ளுவரின் கருத்திலும் வாழ்விலும் காணப்படுவதால். திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடையாக அணிந்திருப்பார் என எண்ணி. அவரது திருவுருவப் படத்திற்கு வெண்ணிற ஆடையே வரையப்பட்டது.

வள்ளுவரின் வலது கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ளஅழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காக தனது அறிவாற்றலால்தளராது உழைத்தும் உயர்ந்த குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்கின்ற வகையிலே வலிய ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும்தெளிவையும் காட்டும்படியாக வரையப்பட்டுள்ளது.

(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

0 Comments