ரணில் பெற்றுக்கொடுத்த புத்தம் புதிய வெற்றி இதோ

ரணில் பெற்றுக்கொடுத்த புத்தம் புதிய வெற்றி இதோ


சுயாதீன வேட்பாளர் எனக்கூறிக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு மக்களின் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ள புத்தம் புதிய வெற்றியின் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன.

அதன் மூலமாக இந்நாட்டின் சிறுவர் தலைமுறையில் 37.4 % போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுவர் போசாக்கின்மை அதிகரித்துள்ளமை பற்றிக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் விசேட குழு அறிக்கையில் அந்த தகவல்கள் வெளிவந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆரம்ப பாடசாலை பிள்ளைகளில் 17.1% வயதிற்கேற்ற எடையின்றி அதாவது நிறை குறைந்த பிள்ளைகளாவர் என்பது வெளிப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 10.3% குள்ளமானவர்கள் என்பது அதாவது வயதிற்கேற்ற உயரமற்றவர்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது. மேலும் 10% எலும்புந்தோலுமாக காட்சியளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு பூராவிலும் அமைந்துள்ள பொதுச்சுகாதார பேறுகால மாதாக்கள் அலுவலகங்களின் தகவல்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படியே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுத்ததாக கூறிவருகின்ற அதேவேளையில் சிறுவர் போசாக்கின்மை வரலாற்றில் சாதனைபடைத்தமட்டத்தில் 37% ஐ கடந்து மேலும் அதிகரித்து வருகின்றது. அத்தகைய பின்னணியில் விவசாயக் கடன்களை வெட்டிவிடுதல், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, உர மானியம் வழங்குதல் போன்ற ஈடேற்றமுடியாத பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி எப்படியாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

lankatruth

 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post