பள்ளி மாணவர்களிடையே மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சர்ச்சை பேச்சாளர் விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரில் முன் ஜென்மத்தில் மனிதர்களாக பிறந்தவர்கள் பாவம் செய்யும் பட்சத்தில் அவர்கள் கை, கால் ஊனமாகவோ பார்வை திறன் அற்ற இந்த ஜென்மத்தில் பிறந்திருப்பார்கள் என மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் நோக்கில் கருத்து தெளிவுத்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பிறகு விஷ்ணு மீது BNS இல் 192 - கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, 196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது. 352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது. 353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது ஆகிய பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் 92 (a) பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட விஷ்ணுவிற்கு வருகின்ற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விஷ்ணு மீது தற்பொழுது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணுவிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments