Ticker

6/recent/ticker-posts

சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற விண்கலன் ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்பியது


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலனில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். அவர்கள் பயணித்த விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி நாளை (செப்.6) அதிகாலை 3.34 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலன் புறப்படும். அது சனிக்கிழமை காலை 9.33 மணியளவில் நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

news18


 Ai SONGS

 



Post a Comment

0 Comments