Ticker

6/recent/ticker-posts

குடும்பத்திற்காக அதிகாலை வரை ஆட்டோ ஓட்டும் 55 வயது பெண்... உழைக்கும் பெண்ணின் உத்வேகமூட்டும் கதை!


சமீபத்தில் வைரலாகி வரும் 55 வயது பெண்மணி ஒருவரின் கதை நெட்டிசன்களின் நெஞ்சை உருக்கி வருகிறது. 55 வயது பெண்மணி ஒருவர் இரவில் ஆட்டோ ஓட்டும் கதை பலரது மனதையும் கவர்ந்துள்ளது. சிங்கள் பேரண்ட்டான இவர், தான் நள்ளிரவு வரை வேலை செய்வதாகவும், வழக்கமாக அதிகாலை 1.30 மணிக்கு வீடு திரும்புவதாகவும் கூறுகிறார். அவரது கடினமான உழைப்பு இருந்தபோதிலும், வீட்டிலும் அவர் சவால்களை எதிர்கொள்கிறார். அவருடைய மகன் பொருளாதார ரீதியாக தனக்கு ஆதரவளிக்கவில்லை, தன்னை அவமரியாதை செய்கிறான் மற்றும் பணத்திற்காக அடிக்கடி சண்டையிடுகிறான் என்றும் வேதனை தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணின் ஆட்டோவில் ஏறிய நபர், அந்த பெண்மணியின் பரிதாப நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆட்டோ ஓட்டுவதுதான் தன் தொழில் என்று கூறியுள்ளார். ஏன் இவ்வளவு நேரம் ஆட்டோ ஓட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் விதியால் இப்படி செய்கிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும், பிச்சை எடுப்பதற்குப் பதிலாக, கடினமாக உழைப்பதில் மரியாதையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உங்களுக்கு பிள்ளை வேலை செய்கிறார்களா என்று அந்த நபர் கேட்டபோது, ​​​​எனக்கு ஒரே ஒரு மகன். அவன் எந்த வேலையும் செய்வதில்லை. எனக்கும் மரியாதையே இல்லை. எப்போதும் வந்து பணம் கேட்பான். இல்லை என்று கூறினால் என்னுடன் சண்டையிடுவான், அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள பெருட்களை உடைப்பதாகவும் வலியுடன் கூறினார். மேலும் அவர் தனது மகனுக்கு 2 வயதாக இருக்கும் போதே கணவனை இழந்த வேதனை குறித்தும் பேசினார். மேலும் அவர், பிச்சை எடுப்பதை விட கடினமான வேலைகளைச் செய்வது நல்லது. வேலை செய்வதில் வெட்கம் இல்லை, ஆனால் பிச்சை எடுப்பதில் அவமானம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அவரது எழுச்சியூட்டும் கதை சமூக ஊடக யூசர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது, சிலர் அவரது வாழ்க்கையை மோசமாக்கியதற்காக அவரது மகனை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒரு யூசர் கூறியதாவது இந்த அத்தையைப் பார்த்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் வாழ்க்கையில் சிறந்த ஒன்றை பெறுவார் என்று நம்புகிறேன். அவரூடைய முக்கியத்துவத்தை அவரூடைய மகன் உணருவார் என்று மற்றொரு யூசர் கூறியுள்ளார். அவருடைய மகன் ஒரு மனிதனாக தோல்வியடைந்தான் என்றும் ஒரு யூசர் கூறியுள்ளார்.

அத்தகையவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்றும் ஒருவர் கூறியுள்ளார். இன்னொரு யூசர், அவர் தன் மகனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்திருக்கிறாள், ஆனால் அவரின் மதிப்பைக்கூட அவன் உணரவில்லை. அத்தை, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களை மகிழ்ச்சியடையச் செய்து, எல்லா இடங்களிலும் உங்களுக்கு அற்புதமான சூழலைத் தருவார் என்றும் கூறியுள்ளார்.

news18


 Ai SONGS

 



Post a Comment

0 Comments