பிரச்சினை கொடுக்கும் "Blackchin tilapia" மீன்கள்... பிடித்துக் கொடுத்தால் சன்மானம் தரும் தாய்லந்து...

பிரச்சினை கொடுக்கும் "Blackchin tilapia" மீன்கள்... பிடித்துக் கொடுத்தால் சன்மானம் தரும் தாய்லந்து...


தாய்லந்து, "blackchin tilapia" என்ற மீன்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறது.

இந்த ஆண்டு (2024) பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 1.3 மில்லியன் கிலோகிராம் எடையிலான "blackchin tilapia" மீன்களைப் பிடித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

ஒரு நேரத்தில் 500 குஞ்சுகளைப் பொரிக்கக்கூடிய "blackchin tilapia" மீன்கள் தாய்லந்திலுள்ள ஆறு, குளம், கால்வாய்களில் வாழும் பல்லுயிர்ச் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அவை சிறு மீன்கள், இறால், நத்தைக் குஞ்சுகள் போன்றவற்றை உண்டுவிடுவதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு "blackchin tilapia" மீன்களைப் பிடித்துத் தரும் உள்ளூர் மக்களுக்குத் தாய்லந்து கிலோகிராமுக்கு 15 பாத் (42 காசுகள்) சன்மானம் வழங்குகிறது. பிடித்த "blackchin tilapia" மீன்களை விற்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

"Blackchin tilapia" மீன்கள், தாய்லந்தின் முக்கிய வருமானத் துறையாக இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளன.

அவை தாய்லந்துப் பொருளாதாரத்துக்கு 10 பில்லியன் பாத் (293 மில்லியன் வெள்ளி) செலவு ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகை மீன்கள் எப்படித் தாய்லந்துக்கு வந்தன என்று தெரியவில்லை. ஆனால் அவற்றை 2010ஆம் ஆண்டு கானாவிலுள்ள ஒரு நிறுவனம் இறக்குமதி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

"Blackchin tilapia" மீன்களின் இனப்பெருக்கத்துக்கு என்ன காரணம் என்பதும் ஆராயப்படுகிறது.

seithi


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post