Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் பதில் அடியும்.... நேதன்யாகுவுக்கு எதிரான மக்கள் போராட்டமும்!


காசாவில் நடந்து வரும் போரில் இஸ்ரேலிய இராணுவம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை அடுத்து அவர்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவின் அமைச்சரவை மீது தங்கள் ஆழ்ந்த விரக்தியை வெளிப்படுத்த இஸ்ரேல் முழுவதும் ஏராளமான மக்கள் வார இறுதியில் மீண்டும் வீதிக்கு வந்தனர். 

சனிக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஜெருசலேம் (அல்-குத்ஸ்), ஹைஃபா மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காசாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை விடுதலை செய்வதில் நெதன்யாகு வெற்றிபெறவில்லை என்றும் ஹமாஸை அளிப்பதாக சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள் என மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அக்டோபர் 7 தெற்கு இஸ்ரேலில் நடந்த  ஹமாஸின் அல்-அக்ஸா புயல் நடவடிக்கையை அடுத்து இஸ்ரேல் காஸா மீது   போரைத் தொடங்கியது. 

ஹமாஸ் போராளிகளின் இந்த நடவடிக்கையில் 1,100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். 

ஹமாஸ் போராளிகளின் இந்த நடவடிக்கையானது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகபெரும் அவமானதாகவும் அச்சுறுத்தலாகவும்  இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் போராளிகளை கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்படட் போரானது இன்று ஒரு வருடத்தை தாண்டும் நிலைக்கு வந்துவிட்டது.

பணயக் கைதிகளை மீட்பதாகக் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாட்டு மக்களை எமற்றிக்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமரின் சுயரூபம் அந்நாட்டு மக்களை கோபத்தின் விளிம்புக்கே கொண்டு சென்றுள்ளது.

பணயக் கைதிகளில் பலர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் பலஸ்தீன் அப்பாவி பொது மக்கள் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதலில் கொள்ளப் பட்டுள்ளனர்.அதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள்.70ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காஸாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு  ஒரே வழி இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே என்று வலியுறுத்திய நெதன்யாகுவால் பணயக்கைதிகளையும் பொதுமக்களையும் கொன்று குவிப்பதைத் தவிர வேறு எந்த வெற்றியையும் அடைய முடியவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் ஹமாஸ் உடனான பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட கைதிகளை இஸ்ரேலால் விடுவிக்க முடிந்தது. 
மேலும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசாவைவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்வரை போர் தொடரும் ,கைதிகளை விடுவிக்க மாட்டோம் என் ஹமாஸ் உறுதியாக இருக்கும் நிலையில் ,தன் பதவியை தங்கவைக்க யுத்தம்தான் ஒரே தீர்வு என பிடிவாதத்தில் இஸ்ரேலிய பிரதமர் இருக்கும் நிலையில் ,இஸ்ரேலிய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் ஹமாசுடனான யுத்தம் ஒரு வருடமாகியும் முடிவில்லாத நிலையில் மீண்டும் வேறு திசைகளில் போரை ஆரம்பித்துள்ளது இஸ்ரேலிய மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் போராளிகளுடன் தற்போது ஆரம்பித்துள்ள போரானது இஸ்ரேலிய ராணுவத்திற்கு மிகப் பெரும் ஒரு சவாலாக இருக்கும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடாத்தப்பட்ட பேஜர் தாக்குதலானது இஸ்ரேல் செய்த மிகப்பெரும் தவறு,அதற்குரிய பதிலடி பயங்கரமாயிருக்கும் என,ஈரான் ,ஹிஸ்புல்லா,ஹூதி,இராக்  .மற்றும் ஹமாஸ் போராளிகள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் உடனான போர் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு சிறு பகுதியாக தற்போது பல முனைகளிலிருந்தும் இஸ்ரேல் மீது போராளிக்குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள்.

வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் உள்ள ராமட் டேவிட் விமானப்படை தளம் மற்றும் பிற முக்கிய இடங்களை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

ராமட் டேவிட் விமானப்படை தளத்தில் டஜன் கணக்கான ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை அதே விமானப்படை தளம் இரண்டாவது முறையாகவும் தாக்கப்பட்டது. 
ஃபாடி-1, ஃபாடி-2 மற்றும் கத்யுஷா ராக்கெட் ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலிய ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் இராணுவ-தொழில்துறை வளாகத்தையும் ஹெஸ்பொல்லா தாக்கியுள்ளது. 

இந்தத் தொழில்துறை வளாகம் மின்னணு போர் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. வடக்கு ஹைஃபாவில் உள்ள ஸ்வுலுன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலுக்குள் ஆழமாக தாக்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை, இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகள்மீது  (IOF) லெபனான் ஆயுதக் குழு சில மணிநேர இடைவெளியில் வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளில் 115 ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இப்படி பல முனைகளில் இருந்து  இஸ்ரேல் மீது தாக்குதல் தொடர்ந்தாலும் ,எதையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேலிய ராணுவம் அப்பாவிப்  பொது மக்களை கொன்று குவிக்கின்றது.

ஐக்கிய நாடுகள்சபை போர் நிறுத்த கோரிக்கையை  வலியுறுத்தும் அதே வேலை இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

கல்ஹின்னை மாஸ்டர் 



 Ai SONGS

 



Post a Comment

0 Comments