Ticker

6/recent/ticker-posts

கால் பாதங்களில் வரக்கூடிய 6 டயாபடீஸ் அறிகுறிகள்.. இது ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடியது..!


ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் வரக்கூடிய மெடபாலிக் கோளாறே டயாபடீஸ். அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென உடல் எடை குறைதல் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். எனினும் இவற்றையும் தாண்டி ஆண்களிடத்தில் பல மோசமான விளைவுகளை கொண்டு வருகிறது டயாபடீஸ். ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது அது கால்களையும் பாதங்களையும் பாதிக்கக் கூடும். பலரும் அறியாத இந்த அறிகுறிகளை உடனே கண்டறிவதன் மூலம் நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

டயாபடீஸ் நோயுள்ள ஆண்களிடத்தில் மட்டும் காணப்படும் அறிகுறிகள், குறிப்பாக கால் மற்றும் பாதங்களில் வரும் பாதிப்புகளை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

தொடர்ச்சியான கூச்சம் அல்லது உணர்வின்மை: கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான கூச்சம் மற்றும் உணர்வின்மை டயாபடீஸால் வரக்கூடிய நரம்பு பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறியாகும். இதனால் கால்களில் ஊசி குத்தினாற் போல் வலி வரக்கூடும். தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே இப்படி நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.

எரிச்சல் உணர்வு: பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது போல் இருந்தால் அது டயாபடிக் நியுரோபதியாகும். இரவு நேரத்தில் இது அதிகமாகி நம் தூக்கத்தை கெடுக்கும். இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை தரமும் பாதிப்பிற்குள்ளாகும்.

காயங்கள் மெதுவாக குணமாகுதல்: சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது ரத்த ஓட்டத்தை பாதித்து காயங்கள் விரைவில் குணமாகாது. டயாபடீஸ் நோயாளிகள் இதை உணர்ந்திருக்கலாம். அவர்களின் கால்களில் வெட்டுக் காயமோ, புண்ணோ இருந்தால், அது குணமாவதில் வழக்கத்தை விட அதிக நேரமாகும். இதனால் தொற்று பாதிப்புகள் அதிகரித்து மேலும் சிக்கலை உண்டாக்கும்.

சருமத்தில் மாற்றம்: டயாபடீஸ் காரணமாக ஒருவரின் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக சருமம் வறண்டோ அல்லது வெடிப்பு காணப்படும். முறையான மாய்ஸசரைசர் பயன்படுத்துவதோடு கால்களின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டால் தொற்றுகள் மற்றும் அல்சர் வரக்கூடிய ஆபத்தைக் குறைக்கலாம்.

கால்களில் தசைபிடிப்பு: கால்களில் தசைபிடிப்பு வருவதற்கு பல காரணங்ககள் இருந்தாலும், இதற்கும் டயாபடீஸிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி கால்களில் தசைபிடிப்பு ஏற்படக்கூடும். அதுவும் இரவு நேரங்களில் இது அதிகமாகலாம். இதனால் உங்கள் தூக்கம் கெட்டு, அன்றாட வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது

உணர்ச்சிகள் குறைவது: டயாபடீஸ் காரணமாக நரம்புகள் பாதிக்கப்படுவதால் கால்கள் மற்றும் பாதங்களின் உணர்ச்சிகள் குறைகின்றன. இதனால் காயமோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ வந்தால் கூட நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியவதில்லை. இப்படி உணர்ச்சிகள் குறைவாக இருப்பதால் ஆண்கள் பெரும்பாலும் தங்கள் கால்களில் வந்துள்ள தொற்றுகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனால் போதிய சிகிச்சையின்றி நமக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகளை கொண்டு வருகிறது.

news18


 



Post a Comment

0 Comments