Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு பலத்த அடி! ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய பிரித்தானியா


இஸ்ரேலிற்கு (Israel) விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா (UK) இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காஸாவில் பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை ஒன்றை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காஸா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

ஆயுத ஏற்றுமதி

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை இங்கிலாந்து இடைநிறுத்துகின்றது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்களில் போர் விமானங்கள், உலங்குவானுர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான பாகங்களும் அடங்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி Yoav Gallant இந்த நடவடிக்கையால் தான் "ஆழ்ந்த மனமுடைந்து" இருப்பதாகத் தனது சமூகவலைத்தளதொன்றில் பதிவிட்டுள்ளார்.

ibctamil


 Ai SONGS

 



Post a Comment

0 Comments