தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி உதிர்தல், இளவயதில் நரை, முடி அடர்த்தி குறைவது, வழுக்கை, பொடுகு என பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதற்காக கண்ட கண்ட ரசாயனங்கள் கொண்ட ஷாம்பூகள், க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர்ச்சிக்கு வீட்டில் பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான தீர்வு என்றால் வெங்காயம் தான்.
வெங்காய சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், சல்பர் சத்து முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
இதனால் சருமத்தில் உள்ள செல்கள் பாதுகாக்கப்பட்டு முடி உதிர்தல் குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது.
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சிறிதளவு மட்டுமே சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதன் சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து கற்றாழை ஜெல் சேர்க்கலாம், இதை இரண்டும் ஒன்றாக கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து எடுத்தால் இயற்கையான Hair Mask தயாராகிவிடும்.
இதை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசலாம், தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை இதை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments