அனுமதி இலவசம்... ஷாப்பிங் மாலில் திடீர் கொள்ளையர்களாக மாறிய பொதுமக்கள்... பாகிஸ்தானில் அதிர்ச்சி!

அனுமதி இலவசம்... ஷாப்பிங் மாலில் திடீர் கொள்ளையர்களாக மாறிய பொதுமக்கள்... பாகிஸ்தானில் அதிர்ச்சி!


வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானிய வம்சாவளி தொழிலதிபர் ஒருவரால் கராச்சியில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட வணிக வளாகத்தில், அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்தில் குவிந்த கும்பல், அரை மணி நேரத்தில் மொத்த பொருட்களையும் அள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் டிரீம் பஜார் என்ற பெயரில் மெகா மால் ஒன்று திறக்கப்பட்டது. இந்த பஜாரை வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர் ஒருவர் மிகுந்த பொருட்செலவில் கட்டி பொதுமக்களுக்காக திறக்க ஏற்பாடு செய்திருந்தார். மால் திறப்பையொட்டி பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அனுமதி இலவசம் என்ற அறிவிப்பை பார்த்ததும் பாகிஸ்தானிய மக்கள் மாலுக்கு முன் குவிய ஆரம்பித்தனர்.

இந்நிலையில், மதியம் 3 மணிக்கு கடைகள் திறப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் வணிக வளாகத்திற்கு முன் சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்து விட்டனர். அனைவரும் ஒட்டுமொத்தமாக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் பயந்து போன பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

மேலும் சில பாதுகாவலர்கள் கூட்டத்திற்குள் புகுந்து 2 ஆள் உயர கட்டைகளை எடுத்து கூட்டத்தை நுழைய விடாமல் தடுத்தனர். ஆனால் அந்த கட்டுக்கடங்காத கூட்டம் அவர்களை தள்ளிவிட்டு விட்டு வணிக வளாகத்திற்குள் புகுந்தது.

உள்ளே சென்றவர்கள் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆக ஆரம்பித்தனர். 3 மணிக்கு திறந்த வணிக வளாகத்தை மூன்றரை மணிக்குள் மொட்டை அடித்து விட்டு கும்பல் கலைந்து சென்றது. வணிக வளாக பொறுப்பாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டு திகைத்து போய் விட்டனர்.

அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வந்ததும் கூட்டம் ஒட்டுமொத்தமாக கலைந்து சென்றது. அரை மணி நேரத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தையே பொதுமக்கள் சூறையாடிச் சென்ற சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post