கம்பளை 'ஆற்று ராஜா' காலமானார்!

கம்பளை 'ஆற்று ராஜா' காலமானார்!


"ஆற்று ராஜா" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த, ஜுனைதீன் ஆசிரியர் தனது 94வது வயதில் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

கம்பளை - இல்லவத்துறையை வசிப்பிடமாக கொண்ட இவர், கம்பளை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கணிதப் பாடத்துறையில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் சேவையாற்றிய இவர்,  நீரில் மூழ்குவோரைக் காப்பாற்றுவதை நீண்டகால சமூக சேவையாகக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் ஜுனைதீன் அவர்கள்  தன்னுடைய சிறு வயதிலிருந்தே நீச்சல் துறையில் ஆர்வம் மிகக் கொண்டவராக இருந்தார். இவர் தனது ஆசிரியத் தோழர்களான ஓவிய ஆசிரியர் மர்ஹூம் எம். எல். எம். தஸ்தகீர், அல்ஹாஜ் எம். எச். எம். சௌகத் ஆகியோருடனும் மற்றும் இவரது நண்பர்களுடனும் சேர்ந்து, வெற்று 'பெரல்'களை இணைத்து 'ஓடம்' செய்து,  கம்பளையிலிருந்து   மகாவலி கங்கையினூடாக   திருகோணமலை வரை சென்று சாதனை படைத்துள்ளவராவார். 

இப்பிரதேசத்தில் எவராவது நீரில் மூழ்கினால் முதலில் 'ஆற்று ராஜா' என்று அழைக்கப்படும் ஜுனைதீன் மாஸ்டரை நாடிச் செல்வதைத்தான் இப்பகுதி மக்கள் கடந்த காலத்தில் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அன்னாரை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் மேலான சுவர்க்கத்தை வழங்கி அருள் புரிவானாக!

செம்மைத்துளியான்


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post