உடல் எடையை அதிகரிப்பால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க கடினமாக போராடுகிறீர்களா? மருத்துவமனைக்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க ஒரு எளிய தீர்வு உள்ளது, இதன் மூலம் நீங்கள் உடல் எடையை குறைக்கலாம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் உங்கள் உடல் பருமனை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். அது எப்படி உதவுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
எடை குறைப்புக்கு சியா விதைகள் ஏன் உதவுகின்றன?
சியா விதைகளில் நார்ச்சத்து, ப்ரோடீன், ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இது வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது பசியைத் தடுக்கிறது மற்றும் எடையை பராமரிக்கிறது.
சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த சியா விதைகள்:
சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், புரோட்டீன்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளன, இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் (ACV)
ஆப்பிள் சைடர் வினிகர் ஆனது ஆப்பிள்களை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது எடை குறைப்பு உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள்
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் ஆசிட் ஆனது பசியின் உணர்வை குறைப்பதன் மூலம் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும். இந்த இரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இருப்பினும், இந்த விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம். சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, எடை குறைப்புக்கு உதவுகிறது.
சியா விதை பானம்
சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது சர்க்கரை இல்லாத பாதாம் பாலுடன் கலக்கவும். விதைகள் ஜெல் போல மாறும் வரை சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதை குடிப்பதற்கு முன், ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
பொதுவாக சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானவை, ஆனால் அவற்றை எடுத்துக் கொள்வதற் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இரண்டுமே கலோரிகள் நிறைந்தவை. எனவே, இதை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஆப்பிள் சைடர் டீ தயாரிப்பது எப்படி.?
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் கலந்த டீ -யை தயாரிக்க, ஒரு கப் சூடான நீரில் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதை காலையில் அல்லது உணவுக்கு முன் குடிக்கவும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் தேனின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News18Tamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments