Ticker

6/recent/ticker-posts

முஷீர் கானுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. திறமையால் கலக்கும் அண்ணன் – தம்பி


மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் முஷீர் கான் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 

அந்த வாய்ப்பில் காலிறுதியில் இரட்டை சதமடித்த அவர் ஃபைனலில் சதமடித்து மும்பை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2024 துலீப் கோப்பையின் முதல் ரவுண்டில் 181 ரன்கள் விளாசிய அவர் இந்தியா பி அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக 94-7 என தம்முடைய அணி தடுமாறிய போது நங்கூரமாக விளையாடிய முஷீர் கான் கடைசியில் 321 ரன்கள் குவிக்க உதவினார். அப்படி 19 வயதிலேயே அழுத்தமான போட்டிகளில் அசத்தும் முஷீர் கான் வருங்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் துவங்குகிறது. 

அதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4 நாட்கள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் 2024 துலீப் கோப்பை மற்றும் இராணி கோப்பை தொடர்களில் அசத்தும் வீரர்கள் வாய்ப்பு பெற உள்ளனர்.

அது போன்ற சூழ்நிலையில் முஷீர் கான் ரஞ்சிக் கோப்பையை தொடர்ந்து துலீப் கோப்பையிலும் அசத்தியுள்ளார். எனவே ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணியில் அவரை தேர்ந்தெடுக்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக பிடிஐ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே அடுத்து நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார்.

அந்த வகையில் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருமே திறமையால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற துவங்கியுள்ளனர். அதே போல இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் மாணவ் சுதர் 7 விக்கெட்டுகளை எடுத்து சி அணியை வெற்றி பெற வைத்தார். அதனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக வளர்க்க அவரையும் ஆஸ்திரேலிய ஏ தொடரில் தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

0 Comments