Ticker

6/recent/ticker-posts

ஆரவாரமற்ற அதிரடி மாற்றங்களை அள்ளிவரும் அநுர அரசும், கல்விமான்களால் நிரம்பப்போகும் நாடாளு மன்றமும்!


நாட்டில் செயல்பாட்டு மாற்றம் வேண்டி நின்ற மக்களிடம்,  அரசியல் மாற்றம் கோரி நின்று தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மக்களும் அரசியல் ஆணையை அநுரகுமாரவுக்கு வழங்கிவிட்டனர்.

தேர்தல் காலங்களில் யாருக்கும் எந்தக் கட்சியை ஆதரிப்பதற்கும் முற்று முழுதாக உரிமை உண்டு; அதுதான் ஜனநாயகமும் கூட. அந்த உரிமையை எவ்வித அச்சமுமின்றி, மக்கள் இம்முறை தேர்தலில் பிரயோகித்துள்ளனர். சலுகைகளை நம்பி மக்கள் சோரம்போன காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் இம்முறை தேர்தலில்  நிரூபித்துக் காண்பித்துக் காண்பித்து விட்டனர்! 

வழக்கமையாக, தேர்தலுக்கு பிறகு உண்டாகும் வெற்றியாளர்களின் நடவடிக்கைகளால் நாடு புரட்டி எடுக்கப் பட்டுவிடும். எதிர் தரப்பினர் ஓடி ஒழிந்து கொள்வர். அந்த அசாதாரண நிலைமை தோழர் அநுரகுமார பதவிக்கு வந்ததும் ஏற்படாமற் போனமை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

சகல படாடோபங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாத்திரமே ஈடுபடலானார். அவரது சீர்திருத்தங்களை முதலில் ஜனாதிபதி மாளிகையின் சமையலறையிலிருந்து ஆரம்பித்தது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தலுக்கு முன் அவர் தம் மக்களுக்கு வாக்களித்தவற்றை நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்பதிலேயே அவர் தன் கவனத்தைச் செலுத்தி வருகின்றார். இதுதான்  அனைத்து மக்களுடைய எதிர்பார்ப்புமாகும்.

பொதுவாக யார் ஜனாதிபதியானாலும் அடுத்த நாள் நாட்டுக்குள் பொதுமக்களால் ஜீரணிக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. காணுமிடமெல்லாம் பட்டாசு வெடிகளும், வெற்றிக் கேளிக்கைகளும் நிறைந்திருக்கும். பால்சோறு பகிர்ந்து மக்கள் வெற்றியைக் கொண்டாடுவர்.கைகலப்புகளும் இடம்பெறும்; அதனால் பாரிய பல விளைவுகளும் ஏற்படுவதுண்டு.

ஆனால், இம்முறை தேர்தலுக்குப் பின், அம்மாதிரியான எதுவும் நடந்ததாக இல்லை!

பதவியேற்பின்போது,  தோழர் அனுரகுமார பேசியதைக் கேட்ட மக்கள் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருதெளிவான ஒளிக்கீற்று அவர்கள் முன் தெரிவதை உணருகின்றனர்.

"நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும், நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது!" என்று தனது உரையின்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்கால அரசியல் பயணம் 'தேசிய மக்கள் சக்தி'க்கு சவால்மிக்க ஒன்றாகவே இருக்கப் போகின்றது.

இனவாதமற்ற, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு அது எடுக்கப் போகும் முயற்சிகள் கண்டிப்பாக போற்றப்பட வேண்டியவைகள்தான் இருக்கப் போகின்றது!
பொதுவாகப் பெரும்பான்மையான மக்கள்  இவ்வாட்சியின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள்!

ஆனால் பிரதேசவாதம், இனவாதம் பேசியே அரசியல்  செய்து பழகிப்போய்விட்ட சிறுபான்மையின அரசியல்வாதிகள் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டுமாயின், சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

ஒழுக்கமான கல்வியாளர்கள்  வேட்பாளர்களாக வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல்களம், அநேகமானோருக்கு பாரிய சவாலாக இருக்கத்தான் போகின்றது என்பது மட்டும் உண்மை! 

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments