அரசியல் பிச்சைக்காரன்!

அரசியல் பிச்சைக்காரன்!

 
வாக்குக் கேட்பதற்காய்
நாக்கைப் பிறட்டும் 
நயவஞ்சகனே! 

பச்சை, சிவப்பு, நீலம் என 
அடிக்கடி நிறம் மா(ற்)றும் 
பச்சோந்தியே! 

நம்பி வாக்களித்தோரை 
நட்டாற்றில் விட்டுவிட்டு 
சுய இலாபங்களுக்காய்  
கட்சி தாவும் நம்பிக்கைத்துரோகியே!

"மக்கள் நலன்கள்" எனப் 
போலி வாக்குறுதிகளை 
அள்ளி எறியும் 
பகற்கொள்ளைக்காரனே! 

மானுட தர்மம், நல் ஒழுக்கங்களைக் 
குழி தோண்டிப் புதைக்கும் 
சமூகவிரோதியே!

நாட்டைச் சூறையாடி 
காட்டிக் கொடுக்கும் 
தேசத்துரோகியே! 

தேர்தல் காலங்களில் மட்டும் 
தேடிவந்து நாக்குக் கூசாமல் 
வாக்குப் பிச்சை கேட்கும் நீ 
ஒரு “அரசியல் பிச்சைக்காரன்”! 

“அரசியல் - ஒரு அறயியல்" 
நீயும் உன் சந்ததியும் மட்டும் சொகுசாய் வாழ 
நாடும் நாமும் நாசமாகியது போதும். 

"கடன்கார வங்குரோத்து" நாடாய் 
நாம் பட்ட சங்கடங்களும் 
செலுத்திய விலைகளும் போதும். 

இனிவ(ள)ரும் இளம் சந்ததியையாவது 
நிம்மதியாய் வாழ வழிவிடு! 
ஓரமாய் ஒதுங்கி நின்று ஓய்வெடு!            


கல்ஹின்னை 
ஹில்மி ஹலீம்தீன்   


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post