பணக்கார விளையாட்டு வீரர்கள்.. 12 மாதங்களில் ரூ.847 கோடி வருமானம்.. டாப் 10ல் இடம்பிடித்த விராட் கோலி

பணக்கார விளையாட்டு வீரர்கள்.. 12 மாதங்களில் ரூ.847 கோடி வருமானம்.. டாப் 10ல் இடம்பிடித்த விராட் கோலி

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் கடந்த 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலியும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையிலான வருமானம் மட்டும் ரூ.847 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச அளவில் இந்தியா விளையாட்டு வீரர்களின் முகமாக அறியப்பட்டு வருகிறார். டி20 உலகக்கோப்பையின் போது விராட் கோலியை கொண்டே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் குவிந்து வந்தனர்.

விராட் கோலி ரன்கள் சேர்த்தாலும் சரி, சேர்க்கவில்லை என்றாலும் சரி.. கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. அதேபோல் விராட் கோலி என்ற பெயர் சர்வதேச அளவில் பிராண்டாக மாறிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. 

கால்பந்து வீரர்கள், டென்னிஸ் வீரர்கள் என்று பலரும் விராட் கோலியை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

இதில் டாப் 10ல் விராட் கோலியும் இடம்பிடித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த பட்டியலில் என்சிஏ சூப்பர்ஸ்டார் ஸ்டீபன் கரி ரூ.831 கோடி வருமானத்துடன் 10வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.847 கோடி வருமானத்துடன் 9வது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கரீன் பென்சமா ரூ.864 கோடியுடன் 8வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ. 864 கோடியுடன் 7வது இடத்திலும், என்பிஏ நட்சத்திர வீரர் ஜியானிஸ் ரூ.873 கோடி வருமானத்துடன் 6வது இடத்திலும், நட்சத்திர கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே ரூ.881 கோடி வருமானத்துடன் 5வது இடத்தில் இருக்கின்றனர்.

mykhel


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post