இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி


பலஸ்தீன (Palastine) மக்களுக்கெதிராக இஸ்ரேல் (Israel) தொடர்ந்த தாக்குதல் நடத்திவரும் வரும் நிலையில் துருக்கி நாட்டின் ஜனாதிபதி இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்தான்புல் (Istanbul) அருகே நேற்று (07) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகன் (Tayyip Erdogan) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. அவர்களின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது தான்.

மேலும் எகிப்து (Eypt) மற்றும் சிரியா (Syria) உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன், லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது" என்று எர்டோகன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப் (USA) பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில் உயிரிழந்த குறித்த பெண், துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதுடன் சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை (The white house) கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐசெனுா் எஸ்கியின் கொலைக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகனும் தனது பேச்சின் போது கண்டனத்தை வெளியிட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளமை மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.

ibctamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post