Ticker

6/recent/ticker-posts

இது மிக மோசமான போக்கு... இஸ்ரேலை கடுமையாக எச்சரித்த ஈரான் ஜனாதிபதி


மத்திய கிழக்கு நாடுகளை மொத்தமாக போருக்கு தள்ளும் நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்து வருவதாக ஈரான் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

மீள முடியாததாக இருக்கும்

இஸ்ரேலின் இந்த தந்திரமானது மீளமுடியாத விளைவுகளுக்கு காரணமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க்கிற்கு வந்த பின்னர் செய்தியாளர்கள் குழுவிடம் பேசிய Masoud Pezeshkian,

மத்திய கிழக்கில் ஸ்திரமின்மைக்கு ஈரான் காரணமாக இருக்க விரும்பவில்லை, ஏனெனில் அதன் விளைவுகள் மீள முடியாததாக இருக்கும் என்றார். ஈரானிய மக்கள் தற்போது போரை அல்ல அமைதியை விரும்புகிறோம்.

ஆனால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மொத்தமாக போர் வெடிக்க வேண்டும் என கோருகிறது என்றார். மேலும், காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இன அழிப்பை சவதேச சமூகம் வேடிக்கை பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திங்களன்று ஹிஸ்புல்லா படைகள் மீது மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளால் மத்திய கிழக்கின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

துரிதமாக நடவடிக்கை

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் மோதலில் ஈரான் களமிறங்குமா என்ற கேள்விக்கு, தங்களின் கொள்கைக்காகவும் தங்களுக்காகவும் போராடும் ஒரு அமைப்பை ஈரான் ஆதரிக்கும் என்றார்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவிக்கையில், நிலைமை ஒரு முழுநீள போருக்கான ஆயத்தமாகவே இருப்பதாகவும்,

உலக நாடுகளின் முதன்மையான தலைவர்கள் துரிதமாக நடவடிக்கை முன்னெடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

lankasri


 Ai SONGS

 



Post a Comment

0 Comments