தேவையானவை
அரைக்கிலோ கோதுமை
ஒரு கிலோ வாழைப்பழம்
ஒரு பிடி கொடி முந்திரிப்பழம்
ஒரு மேசைக் கரண்டி வேக்கிங் பவுடர்
காக் கிலோ வெள்ளைச் சீனி
ஒரு மூடி தேங்காய்
ஒரு சிட்டிகை ஏலம் பவுடர்
ஒரு கப் பால்
செய்முறை
கோதுமை மாவுடன்
வாழைப் பழம் கொடிமுந்திரி பழம்
வேக்கிங் பவுடர் சீனி பால்
சேர்த்து நன்றாக. பசைந்து எடுக்கவும்
அதை அரை மணி நேரம் ஊற விடவும்
பின்னர் தேங்காயோடு ஏலம் தூள்
போட்டு சிறுதளவு சீனி உப்பு சேர்த்து
அடுப்பில் வைத்து நீர் போகும் வரை கிளறி இறக்கவும்
பின்னர் அடிப் பகுதி ஒட்டாத சட்டியில் எண்ணெய் தடவி விட்டு பாதி மாவை பரப்பவும் அதன் மேலே தேங்காய்ப் பூவை முற்றாகப் போடவும் மீதி மாவை அதன் மேலே போட்டு விட்டு சிறுதளவு எண்ணெய் ஊற்றி விடவும்
சட்டியை அடுப்பில் வைத்து மெதுவாக
அடுப்பை எரிய விடவும் சட்டியை மூடி கொண்டு மூடாமல் முன்பு பால் அப்பம் செய்வோர் செய்யும் போது பார்த்து உள்ளீர்களா அப்பச் சட்டிக்கு மேல் ஒரு சட்டி வைத்து நெருப்பு எரிப்பார்கள் அது போன்று செய்ய வேண்டும் இரண்டு மணி நேரம் பின்னர் அடுப்பை அடைத்து விட்டு ஆறியதும் தட்டி கொட்டினால் அழகான வண் தயார் மாலை உணவாக தேநீருக்கு பொருந்தும் (கேஸ் அடுப்பு இல்லாதோரும் இதனை செய்யலாம்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments