Ticker

6/recent/ticker-posts

வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் – ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 
புள்ளிபட்டியல் : 

இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்திய அணி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

இந்த புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி 7 வெற்றி மற்றும் இரண்டு தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

அதே வேளையில் இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த வங்கதேச அணி ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்திய பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள வேளையில் இந்திய அணி இன்னும் 9 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்வேளையில் அதில் நான்கு போட்டியில் வெற்றி பெற்றால் கூட இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments